Map Graph

பால்குளங்கரை தேவி கோவில்

கேரளத்தில் உள்ள இந்து கோவில்

பால்குளங்கரை தேவி கோவில் இந்தியாவின், கேரள மாநிலத்தில், திருவனந்தபுரத்தில் உள்ள பேட்டை எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு இந்து கோவில் ஆகும். இது திருவனந்தபுரம் சந்திப்பிலிருந்து 2 கி.மீ தொலைவிலும், மேற்கு கோட்டை சந்திப்பிலிருந்து 700 மீ தொலைவிலும், சாக்கை நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து 1.5 கி.மீ தூரத்திலும் உள்ளது. இது திருவனந்தபுரம் நகரில் உள்ள ஸ்ரீ பத்மநாபசாமி கோயிலுக்கு மேற்கே சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இப்போது இந்த கோயில் சிறீபால்குளங்கரை தேவி கோயில் அறக்கட்டளையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கேரளாவின் மிகப் பழமையான கோயில்களில் ஒன்றாகும்.

Read article